Monday, December 9, 2013

கர்மா, உபாசனை, பக்தி, ஞானம்-(காஞ்சி ஸ்ரீமகாபெரியவர்) அவ்வப்போதைய மனக்குழப்பத்... துக்கு மருந்தாக பகவத் கீதையைத்தான் எடுக்கிறோம். பல தெளிவான பதில்கள் அதில் கிடைக்கின்றன. ஆனாலும் சில நேரம் குழப்புகின்றன.
 
 கர்ம யோகப்படி, செயல்புரிந்தே மேன்மையடையலாம் என்று தெளிவாகிறது மனம். ஜனக மகாராஜர், கர்மங்கள் செய்தே சித்தியடைந்தவர் என்கிறது கீதை. ஆனால் பிறகு வேறிடத்தில் ஞானமே உயர்ந்தது என்கிறார் கிருஷ்ணர். கருமத்தைக் காட்டிலும் ஞானமே மேலானது என்று நீ சொல்லும்போது, எதற்காக என்னைக் கொடிய கர்மத்தையே செய்ய ஏவுகின்றாய் என்று அர்ஜுனனே கண்ணனிடம் கேட்கிறானே
 
இப்படி, செயல்புரியக் கட்டளையிடும் கர்ம யோகமும், செயலற்ற தன்மையான தியானமும் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கிறதே? அப்படித்தானா? கர்மமும் தியானமும் ஒன்றுக்கொன்று முரணா என்றால், இல்லவே இல்லை. ஒன்றிலிருந்து இன்னொன்று என்று இவை வருகின்றன. நேராக மனசை அடக்கி ஆத்மாவை அனுஸந்தானம் செய்ய முடியாத ஆரம்ப நிலையில் கர்மானுஷ்டானம் அதனால் சித்தசுத்தி வந்த பின் கர்மம் தொலைந்த தியானம், யோகம் இத்யாதி.
 
 இதில் சித்தியான பின் எதுவுமே தன்னை பாதிக்காது என்ற நிலையில், லோக úக்ஷமத்துக்காக கர்மா - உள்ளே அடங்கி வெளியே கூத்தடிக்கிற நிலை. முடிவிலே லோகமெல்லாம் மாயை. இருக்கிற ஒரே வஸ்து பிரம்மம்தான். நாம் அதற்கு இரண்டாவதாக இல்லாமல் அத்வைதமாக அதோடு ஒன்றிப்போய், ஒரு காரியமும் எண்ணமும் இல்லாமல் பிரம்மமாகவே இருக்க வேண்டும் என்பதுதான் ஸ்ரீபகவத்பாதரின் சித்தாந்தம். அவர் பெயரை வைத்துக் கொண்டிருக்கிற நானோ எப்போது பார்த்தாலும் பல தினுசான காரியங்கள், வேத கர்மங்கள், பூஜை, ஜபம், பரோபகாரம் இதுகளையே சொல்லி வருகிறேனே என்றால், நாம் இருக்கிற ஸ்திதியில் இங்கேயிருந்துதான் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இப்படி ஆரம்பித்தால் இதுவே படிப்படியாக அத்வைத மோக்ஷத்தில் கொண்டுவிடும். ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவும், சாட்சாத் நம் பகவத்பாத ஆச்சார்யாளும் வகுத்துத் தந்த கிரமமும் இதுதான். முதலில் கர்மா, அப்புறம் உபாஸனை, பக்தி, முடிவில் ஞானம். முடிவில் ஞானம் “ஸ்ரீ மஹாபெரியவா காயத்ரி மந்திரம்” தான் அந்த மஹா பாக்கியம். ஓம் ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ராய வித்மஹே சார்வ பௌமாய தீமஹி | தன்னோ ஜகத்குரு ப்ரசோதயாத் || லோகரக்ஷகரை எல்லோருமாக போற்றி, சகல ஜீவராசிகளும் துன்பங்களிலிருந்து விடுபட்டு நல்வாழ்வு வாழ ப்ரார்த்திப்போமாக! மஹாஸ்வாமி எல்லோருக்கும் உடையவராயிற்றே! ஸ்ரீ மஹா பெரியவா சரணம்!

No comments:

Post a Comment