Monday, December 9, 2013

ஸ்ரீ ஐயப்பன் உருவ பொருள், ஸ்ரீ ஐயப்பன் நமஸ்கார ஸ்லோகங்கள்-ஸ்ரீ சாஸ்தா தசகம் மற்றும் பஞ்சரத்தினம்

ஐயப்பன் என்பவர் ,சிவனாகவும் விஷ்ணுவாகவும் உருவம் கொண்டிருப்பது ஒரே பரமாத்மாதான். சிவனாக இருக்கும் போது ஞான மூர்த்தியாகவும் நாராயணனாக இருக்கும் போது உலகைக் காக்கும் தொழிலைச் செய்பவராகவும் விளங்குகிறார். இப்படிச் செய்வதால் சிவனும் விஷ்ணுவும் வெவ்வேறு என்றோ , அல்லது தொழிலை ஒட்டிக் கொஞ்சம் வேறு பட்டது போ...ல் காணப் படுகிற நிலையில் சிவனுக்குப் பரிபாலன சக்தி இல்லையென்றோ,அல்லது விஷ்ணுவுக்கு ஞான சக்தி இல்லையென்றோ அர்த்தமில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் முக்கியமாகச் செய்கிற அநுக்ரஹத்தை வைத்தே குறிப்பிடப் படுகிறது. ஆலமரத்தினடியிலோ வெள்ளிப் பனி மலையின் மீதோ சிவபெருமான் விற்றிருக்கிறார். உடல் முழுதும் விபூதியைப் புசிக் கொண்டு, ஜடாமுடியும், புலித்தோலும் தரித்து ஞான ஸ்வருபியாக காட்சி தருகிறார். ஆத்ம த்யானத்தில் அமர்ந்திருக்கும் அவரது சந்நிதி ஒரே சாந்தமாக உள்ளது. பரம சத்தியத்தை போதிக்கும் பரம குரு அவரே. பரம ஞானத்தை உபதேசிப்பது ஞானியின் தொழில். லோக ரக்ஷணம் என்பது அரசனின் கடமை. அதனால்தான் ஸ்ரீமன் நாராயணனை ஸ்ரீ வைகுண்டத்தில் சக்கரவர்த்தியைப் போல் தியானிக்கிறோம்.

ஹரியும் சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் ஸ்ரீ சக்ர யோகபீடம். எல்லா கடவுளும் ஒன்று என்பதை உணர்த்தும் அய்யனின் உருவ அமைப்பு. என்னை பூரணமாக சரண் அடைத்தால் வாழ்வில் கிடைக்கும் முக்தி நிலை என்பதை உணர்த்தும் சின் முத்திரை (சத் +சித் +ஆனந்தம் = சச்சிதானந்தம் ). சரணாகத வத்சலனே சரணம் அய்யப்பா.

ஸ்ரீ ஐயப்பன் நமஸ்கார ஸ்லோகங்கள் :- ஸ்ரீ சாஸ்தா தசகம்

1)லோகவீரம் மஹா பூஜ்யம் ஸர்வ ரக்ஷாகரம் விபும்
பார்வதீ ஹ்ருதயா னந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்

2)விப்ர பூஜ்யம் விச்வ வந்த்யம் விஷ்ணு சம்போ ப்ரியம் ஸுதம்
க்ஷிப்ர ப்ரஸாத நிரதம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்

3)மத்த மாதங்க கமணம் காருண்யாம்ருத பூரிதம்
ஸர்வ விக்ன ஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்

4)அஸ்மத் குலேச்வரம் தேவம் அஸ்மத் சத்ரு விநாசனம்
அஸ்மதிஷ்ட ப்ரதா தாரம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்

5)பாண்ட்யேச வம்ச திலகம் கேரளே கேளி விக்ரஹம்
ஆர்த்த த்ராண பரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்

6)த்ர்யம்பக புராதீசம் கணாதிப ஸமன் விதம்
கஜாரூட மஹம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்

7)சிவ வீர்ய ஸமுத் பூதம் ஸ்ரீநிவாஸ தனூத்பவம்
சிகிவா ஹானுஜம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்

8)யஸ்ய தந்வந்த்ரிர் மாதா பிதா தேவோ மஹேச்வர:
தம் சாஸ்தா மஹம் வந்தே மஹாரோக நிவாரணம்

9) பஞ்ச ரத்னாகய மதட்யோ நித்யம் ஷுத படென்னரஹ
தஸ்ய பிரசன்னோ பகவான் சாஸ்தா வசதி மானசே !!

10)பூதநாத ஸதாநந்த ஸர்வபூத தயாபர
ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ சாஸ்த்ரே துப்யம் நமோ நம:

11)ஆச்யாம கோமள விசால தனும் விசித்ரம்
வாஸோ வஸான மருணோத் பல தாம ஹஸ்தம்
உத்துங்க ரத்ன மகுடம் குடிலாக்ர கேசம்
சாஸ்தார மிஷ்ட வரதம் சரணம் ப்ரபத்யே.

ஸ்ரீ சாஸ்தா பஞ்ச ரத்தினம்

1. அருணோதய ஸங்காசம் நீல குண்டலதாரிணம்
நீலாம் பரதரம் தேவம் வந்தேகம் பிரம்ம நந்தனம்

2. சாப பானம் வாம ஹஸ்தே ரௌப்பிய வேத ரஞ்ச தக்ஷிணே
விலசத் குண்டல தரம் வந்தேகம் விஷ்ணு நந்தனம்

3. வியாக் ராரூடம் ரக்த நேத்ரம் ஸவர்ண மால விபூஷ்ணம்
வீர பட்டதரம் கோரம் வந்தேகம் பாண்டிய நந்தனம்

4. கிங்கிண் யொட்டியாண பூஷேஷம் பூர்ண சந்திர நிபானணம்
கிராத ரூபா சாஸ்தாரம் வந்தேகம் பாண்டிய நந்தனம்

5. பூத வேதாள ஸம்ஸேயம் காஞ்சனாத்ரி நிவாஸினம்
மணிகண்ட மிதிக் யாதம் வந்தேகம் சக்தி நந்தனம்

மற்ற சாஸ்தா ஸ்லோகங்கள் :-

அன்யதா சரணம் நாஸ்தி த்வமேவ சரணம் மம
தஸ்மாத் காருண்யபாவேந ரக்ஷமாம் ஸபரீஸ்வர

கர சரண க்ருதம்வாக்காயஜம் கர்மஜம் வா
ஸ்ரவண நயனஜம்வா மாநஸம்வா அபராதம்

விஹிதமவிஹிதம் வா ஸர்வம் ஏதத் க்ஷமஸ்வ
ஜய ஜய கருணாப்தே ஹே தர்ம சாஸ்த்ரு நமஸ்தே
See More
Like · · Share · December 7

No comments:

Post a Comment