மனிதனின் மனம் எந்தச் சலனமும் இன்றிச் சீராக இயங்கிக்கொண்டிருக்கும். அத்தகையோனின் வாழ்வில் எதிர்பாராத துன்பம் ஏதேனும் நிகழ்ந்துவிட்டால் , அந்தச்சீர்மையின் தன்மையில் சலனம் தோன்றிவிடும். புதிய சிந்தனைகள் தோன்றும் ; வாழ்வில் நடந்திராத, நடக்க வொண்ணாத அளவுக்குக் கற்பனைப் பாட்டையில் சென்றுகொண்டே இருக்கும். எது வாழ்வு, எது சாவு, எது நிலையானது, எது மறையக்கூடியது என்று ஆழ்ந்து சிந்திக்கத் துவங்கும் போது . வயது இளமையில் இருக்கும் போதே, மனம் முதிர்ந்து முதுமையடைகிறது.
No comments:
Post a Comment