Monday, December 16, 2013

திருவனந்தபுர மஹாராஜா “உத்திராடம் திருநாள் மார்தாண்ட வர்மா” பத்மநாபஸ்வாமியின் திருவடியை அடைந்தார். அவரின் ஆன்மா சாந்தியடைய ஆன்மீக அனபர்கள் மோட்ஷ தீபம் ஏற்றுமாறு வேண்டிக் கொள்ளுகிறேன்.

DERSPIEGEL என்ற ஜெர்மானிய பத்திரிகைக்கு திருவனந்தபுர மஹாராஜா உத்திராடம் திருநாள் மார்தாண்ட வர்மா அளித்த நேர்முகம் – (தமிழில் வி. ரமணன் )

நாங்கள் சேரர்கள். முன்னாளில் தென்னிந்தியாவில் ஆட்சி செலுத்திய நான்கு அரச வம்சங்களுள் ஒன்று எங்களுடையது. 1750 வாக்கில் திருவாங்கூர் சமஸ்தானம் அளவிலும் வளத்திலு...ம் செழிப்பாக இருந்தது. என் மூதாதைய மன்னர்களில் ஒருவர் மிக தனித்தன்மை வாய்ந்த, சரித்திர பிரசித்தி பெற்ற ஒரு ஆன்மீக முடிவை எடுத்தார். ஆன்மீகத்தில் ஈர்க்கபட்ட அவர் எங்கள் குலதெய்வமான பத்மநாப சுவாமியிடம் அவரது செல்வம் அனைத்தையும் நாட்டையும் கோவிலுக்கு கொடுத்துச் சரணடைந்தார். நமது குடும்பம், கோவிலையும் அதிலுள்ள சொத்துகளையும் நாட்டையும் அவர் சார்பில் பாதுகாத்து வர வேண்டும். ஆனால் நமது குடும்பத்தினருக்கு அதனால் எந்த விதச் செருக்குமிருக்கக் கூடாது என்று சொல்லி இந்த முடிவை எடுத்தார். அதிகப் பணம் ஆணவத்தை வளர்க்கும் என்று எணணிய அவர் திருவாங்கூர் சமஸ்தான மன்னர்கள் பத்மநாபருக்கு “தாஸர்கள்” “ என அறிவித்தார். தாஸர்கள் என்றால் கட்டளையேற்று ஊழியம் செய்பவர்கள். வேலைக்காரர்கள் இல்லை. ஒரு வேலையாள் ராஜினாமா செய்யலாம், ஒய்வு பெறலாம். ஆனால் தாஸர்கள் வாழ்நாள் முழுவதும் ஊழியம் செய்யவேண்டும்.

ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாராயணாய
See More


Like · · · 17 hours ago ·


No comments:

Post a Comment